Saturday, 3 April 2010

imursO!HH45 series.


கண்டேன்! கண்டேன்! கண்டேன்! திருமறுமார்பனை கண்டேன்
கண்டேன் அழகிய பொன்மேனி தாமரை கண் கனி வாய்
கண்டேன் சுடராழி வாள் வில் தண்டு, புரிச்சங்கம் கை கண்டேன்
கண்டேன் திருவடிகீழ் சடகோபன்! கண்டேன் வைகுந்தம் புகுவும் வழி.

வழியும் விதியும் நிதியம் கதியும் எல்லாம் மாதவனே என்று
மொழியில் இவ் சொல்லை நமக்கு எடுத்து காட்டிய ஆசிரியர்
ஓரான்வழி முதல்வன் நம் திருக்குருகூர் ஆழ்வார்
ஒழியன்தது என் பாவம் எல்லாம் மகிழ் மாறன் மணத்தாலே.

மகிழ் மாறன் மனம் தேடி வந்த அவாசியர் மதுரகவியின்
புகழ் பெற்ற பண்ணு பாடல் பல ஆயிரம் நற்சொல்லி
தமிழ் வேதம் கற்று பின் உலகில் அதை ஒளிபரப்பிய
புகழ்பெற்ற தவர் நாதமுனிவன் பொன்னடி சரண் அடை நெஞ்சே!

சரண் அடை நெஞ்சே நம் நாதன் முனிவன் சிங்கப்பிரானை
சரண் அடை நம் தயாகன் நாத மூனியின் வீர திருவடியை
அரன் நமக்கு அவரை உய்யகோன்ட கமலக்ண்ணன் புனிதன்
மரணம் வரை விரும்பு அவர் தொண்டர் குலத்து காலடி மணலே

மணல்மேல் கிடந்தது தன் ஆசிரியன்னால் அருள்நாமம் பெற்ற
குணத்தால் உயர்வன், கூர்மதியுடைய புனிதன், ஒளிமயமான அம்மான்
தனம் நமக்கு அரங்கநகரப்பனே என்று காட்டிய இராமன்
மணமே மணக்கால் நம்பி! மணக்கால் நம்பி! என்றே கூரு .

கூரு மணமே உத்தமன்னை இராமன்னை எங்கள் நம்பியை
கூரு அவரால் திருத்திய அரசன் யமுனைதுறைவனை
குருவாய் நம்மை ஆலவன்து அரங்கநகரில் நமக்கு
புருடன் சிரிதரன்னே என்று சொல்லி காட்டினார் அவர்